விக்ரம் பிரபு படத்திற்கு சிம்பு பட நாயகி!

விக்ரம் பிரபு படத்திற்கு சிம்பு பட நாயகி!

செய்திகள் 15-Dec-2015 2:19 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேன்ன் இயக்கத்தில் சிம்புவுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மஞ்சிமா மோகன் அடுத்து விக்ரம் பிரவுடனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். தற்போது ‘வாகா’, ‘வீரசிவாஜி’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்து ‘சுந்தரபாண்டியன்’ ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தான் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் மஞ்சிமா மோகன். மலையாளத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்து அறிமுகமான படம் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’. சமீபத்தில் வெளியான் இப்பட சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் மஞ்சிமா மோகன் நடித்து வரும் ‘அச்சம என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடிவடையாத நிலையில் அவருக்கு விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;