ரிலீஸுக்கு ரெடியான ‘பூலோகம்’... உற்சாகத்தில் ஜெயம் ரவி!

ரிலீஸுக்கு ரெடியான ‘பூலோகம்’... உற்சாகத்தில் ஜெயம் ரவி!

செய்திகள் 15-Dec-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்க, ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘பூலோகம்’. 2010ஆம் ஆண்டே துவங்கப்பட்ட இப்படம் சிற்சில காரணங்களால் தாமதமாக உருவானது. கடந்த வருட ஆரம்பத்தில் ‘பூலோகம்’ படத்தின் டிரைலர் ஒன்று வெளியாக, படம் எப்படியும் ரிலீஸாகிவிடும் என ரவியின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதுவரை ரிலீஸ் குறித்த தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய டிரைலர் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு படத்தையும் வரும் 24ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு.

ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், தனி ஒருவன் என ஏற்கெனவே இந்த வருடத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸாகியுள்ளது. அதோடு ‘தனி ஒருவன்’ படத்தின் பெரிய வெற்றி மூலம் ஜெயம் ரவியின் மார்க்கெட்டில் பெரிய திருப்புமுனையும் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தோஷத்தோடு, தற்போது நீண்டநாள் கிடப்பில் இருந்த ‘பூலோகம்’ படமும் வெளியாகவிருப்பதால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜெயம் ரவி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;