விஷாலின் ஆஸ்தான் இயக்குனருடன் இணையும் விக்ரம்!

விஷாலின் ஆஸ்தான் இயக்குனருடன் இணையும் விக்ரம்!

செய்திகள் 15-Dec-2015 10:31 AM IST VRC கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்துடன் விக்ரம் வேறு ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனரான திரு இயக்குகிறார். விஷால் நடித்த ‘சமர்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திருவும், விக்ரமும் முதன் முதலாக இணையும் இப்படத்தை ஜீவா நடிப்பில் ‘சிங்கம் புலி’ படத்தை தயாரித்த ‘S.S.F’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான் தலைப்பு, இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. சமீபகாலமாக ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த விக்ரம் இப்போது ஆனந்த் சங்கர் மற்றும் திரு இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;