ஜி.வி.யுடன் மீண்டும் இணையும் ஆனந்தி!

ஜி.வி.யுடன் மீண்டும் இணையும் ஆனந்தி!

செய்திகள் 15-Dec-2015 10:13 AM IST VRC கருத்துக்கள்

‘கத்தி’ படத்தை தயாரித்த ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தொடர்ந்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன்-2’ படத்தை பிரம்மாண்டமான முறையில் இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்துடன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் நம் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்! நேற்று இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஜி.வி.யை வைத்து ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தான் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் ஜி.வி.யுடன் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் இணைந்து நடித்த ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘பருத்தி வீரன் சரவணன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘யோகி’ பாபு, நிரோஷா, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்க்ள்.
ஜி.வி.யே இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ணன் வசந்த் கவனிக்கிறார். படத்தொகுப்பை ஆன்டனி ரூபன் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;