3 கிராமங்களை தத்தெடுத்த சூர்யாவின் அகரம்!

3 கிராமங்களை தத்தெடுத்த சூர்யாவின் அகரம்!

செய்திகள் 14-Dec-2015 1:50 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய தன்னார்வலர்களும், சினிமா கலைஞ்ரகளும் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். ஏற்கெனவே கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாயை நடிகர் சங்கம் மூலமாக முதல்வரின் மழை நிவாரண நிதிக்காக வழங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது அகரம் ஃபவுண்டேஷன் மூலமாகவும் மேலும் பல உதவிகளை செய்துள்ள நிலையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமங்களான நெல்வாய், கச்சூர் கிரகம்பாக்கம் ஆகிய 3 கிராமங்களை தத்து எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். அந்த கிராமங்களிலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளை ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலமாக செய்யவிருப்பதாக நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை தவிர சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பொருளாளராக வெற்றிபெற்ற நடிகர் கார்த்தி, நடிகர் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து ஓயாது வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;