‘பீப் சாங்’ குறித்து டி.ராஜேந்தர் போலீஸில் புகார்!

‘பீப் சாங்’ குறித்து டி.ராஜேந்தர் போலீஸில் புகார்!

செய்திகள் 14-Dec-2015 11:32 AM IST VRC கருத்துக்கள்

அண்மையில் இணைத்தில் வெளியான ஒரு ‘பீப் சாங்’ சம்பந்தமாக எழுந்துள்ள சர்ச்சையில் இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் மீது நிறைய கண்டன குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இசை அமைப்பாளர் அனிருத் நேற்று ஒரு விளக்கத்தை அளித்திருந்தார். நடிகர் சிம்புவின் சார்பில் அவரது தந்தை டி.ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகாரை பதிவு செய்துள்ளார். டி.ராஜேந்தர் அளித்துள்ள அந்த புகாரின் விவரம் வருமாறு:

‘‘எனது மகனும், நடிகருமான சிலம்பரசன் தற்போது ஊரில் இல்லாததால் அவர் சார்பாக இந்த புகாரை அளிக்கிறேன். அனிருத் இசை அமைத்து என் மகன் சிலம்பரசன் பாடியுள்ளாதாக கூறப்பட்டு சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படும் அந்த ‘பீப்’ சாங்’ இன்னும் முழுமை பெறாத நிலையில் தான் இருக்கிறது. ‘டம்மி’யாக உருவாக்கப்பட்டு வைத்துள்ள அந்த பாடலை இதுவரை எந்த திரைப்படத்திலும் இடம்பெற செய்யவும் இல்லை, அதிகாரபூர்வமாக வெளியிடவும் இல்லை. இந்நிலையில் அந்த பாடல் வரிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என் மகன் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நற்பெயரையும் தகர்க்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, தவறான எண்ணத்தோடும் சில விஷமிகள் இந்தப் பாடலை இணையத்தில் கசிய விட்டு பிரச்சனை உண்டு பண்ணியிருக்கிறார்கள். அதனால் இந்த விஷயத்தில் தவறு செய்தவர்களை கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் கிடைக்க செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;