‘எந்திரன் 2’க்குப் பிறகு ‘மருதநாயக’தை தயாரிக்கிறதா லைக்கா?

‘எந்திரன் 2’க்குப் பிறகு ‘மருதநாயக’தை தயாரிக்கிறதா லைக்கா?

செய்திகள் 14-Dec-2015 11:23 AM IST Chandru கருத்துக்கள்

கமல்ஹாசனின் கனவுப்படம் என்று வர்ணிக்கப்படும் ‘மருத நாயகம்’ படம் சில பல காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டு, பின்பு கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால்தான் இதை நிறுத்திவைத்துள்ளதாக உலகநாயகனே தெரிவித்திருந்தார். அவ்வப்போது ‘மீண்டும் மருதநாயகம்’ என்ற செய்திகள் வலம் வந்தாலும், இதுவரை அது நடைபெறாமலே இருந்து வருகிறது. உலகநாயகன் ரசிகர்களின் 18 வருட ஏக்கத்திற்கு லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் மூலம் பதில் கிடைக்கவிருப்பதாக தற்போது செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

ஆம்... சூப்பர்ஸ்டாரின் எந்திரன் 2வை முடித்த கையோடு, உலகநாயகனின் மருதநாயகம் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘மருதநாயகம்’ படத்தை உருவாக்குவதற்குத் தேவையான பட்ஜெட் மிகப்பெரியதாக இருப்பதால், தற்போதைய தமிழ்சினிமா சூழ்நிலையில் அது லைக்கா நிறுவனத்தால் மட்டுமே சாத்தியம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். இருந்தும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;