‘பீப் பாடல்’ சர்ச்சை – அனிருத் விளக்கம்!

‘பீப் பாடல்’ சர்ச்சை – அனிருத் விளக்கம்!

செய்திகள் 14-Dec-2015 10:52 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு ‘பீப் பாடல்’ சம்பந்தமாக இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிம்பு மீது நிறைய கண்டனங்கள் எழுந்திருப்பதோடு, சில மாதர் சங்கத்தினர் அனிருத், சிம்பு மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த பாடலுக்கு தான் இசை அமைக்கவில்லை என்று கூறி இசை அமைப்பாளர் அனிருத் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

‘‘தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பித்த டொரென்டோ கச்சேரியின் வேலையாக நான் டொரேண்டோவில் இருக்கிறேன். அந்த சாங் வெளியாகிய நேரத்தில் நான் அந்த நிகழ்ச்சி சம்பந்தமான வேலையில் இருந்தேன். ‘பீப் சாங்’ பற்றிய என்னுடைய நிலையை நான் இப்போது தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் அந்த பாடல் வரிகளை எழுதவில்லை, இசையமைக்கவில்லை, பாடவும் இல்லை.எதிர்பாரதவிதமாக என்னுடைய பெயர் இந்த சர்ச்சையில் இழுத்துவிடப்பட்டுள்ளது. எனக்கு பெண்கள் மீது மிகப் பெரிய் அளவில் மரியாதை உள்ளது என்பதை நான் இசையமைத்த பாடல்களின் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். விரும்பத்தகாத இந்த விஷயத்திற்காக நான் மிகவும் வருந்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்’’.என்று அதில் குறிப்பிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;