இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் தந்தை மரணம்!

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் தந்தை மரணம்!

செய்திகள் 14-Dec-2015 10:31 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களிலும் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாசிரியராகப் பணிபுரிந்துள்ள சத்யமூர்த்திக்கு வயது 63. பெடராயுடு, அபிலாஷா, கிலாடி 786, ஷத்ருவு உட்பட பல படங்களின் திரைக்கதைகள் அவரது கைவண்ணத்தில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சத்யமூர்த்திக்கு தேவி ஸ்ரீ பிரசாத், சாகர் என்ற இரண்டு மகன்களும் பத்மினி என்ற மகளும் உள்ளனர். மறைந்த சத்யமூர்த்தியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை தேவி ஸ்ரீ பிரசாத்தின் சென்னை வீட்டிலிருந்து துவங்கவிருக்கிறதாம்.

சத்யமூர்த்தியை இழந்து தவிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் குடும்பத்தாருக்கு ‘டாப் 10 சினிமா’வின் ஆழ்ந்த இரங்கல்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - ஏண்டி ஏண்டி பாடல் வீடியோ


;