நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க!

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க!

செய்திகள் 12-Dec-2015 1:07 PM IST VRC கருத்துக்கள்

எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலு பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலைப்படும் சமுதாயம் நம்முடையது. இத்தகைய ஒரு கருத்தை பற்றிக் கூறும் படமாக உருவாகிறது 'நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க'. முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் எடுக்கப்படும் இப்படத்தை மாதவன் இயக்குகிறார். ‘கிருஷ்ணா டாக்கீஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இந்தரஜித் கதாநாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை தேவிகா நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் மாதவன் கூறும்போது, ‘‘நமக்கு துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் மீறி எல்லோரும் சிரிக்க வேண்டும் என்பதுதான் இப்படத்தின் கருத்து. சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு, இப்படம் சிறந்த சிரிப்பு மருந்தாகும்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொக்கெற்றி - தி நம்பி effect டீஸர்


;