பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘மனக்களிம்பு’ தரும் பார்த்திபன்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘மனக்களிம்பு’ தரும் பார்த்திபன்!

செய்திகள் 12-Dec-2015 12:48 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் அண்மையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய சினிமா கலைஞர்கள் உதவி வருகிறார்கள். நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா, சித்தார்த், மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் என வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட கலைஞர்கள் ஏராளம்! பெரும் வெள்ளம் சூழ்ந்த ஏரியாக்களில் நேரடியாக களம் இறங்கி தொண்டாற்றிய நடிகர் பார்த்திபன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். பார்த்திபனின் ‘மனித நேயம் மன்றம்’ சார்பில் நடைபெறவிருக்கும் இந்த முகாமுக்கு ‘மனக்களிம்பு’ என்று பெயரிட்டுள்ளார் பார்த்திபன்.

நாளை (13-12-15) காலை 9 மணி அளவில் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞ்ரக்ள் சங்க வளாகத்தில் (கமலா தியேட்டர் அருகில்) நடைபெறவிருக்கும் இந்த முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், மனநல ஆலோசனைகள், இரத்த தானம், மேடையில் ஊக்க உணவு ஆகிய சேவைகள் நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் நடிகர் பார்த்திபனுடன் நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா, மயில்சாமி, ராகவா லாரன்ஸ், சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ரோகிணி என ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;