விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘24’ படத்தில் நடித்து முடித்த நித்யா மேனன், தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப்புக்கு ஜோடியாக ‘முடிஞ்சா இவனப் புடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ‘அரிமா நம்பி’ படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் நித்யா மேனன் என்ற உறுதியான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ‘புலி’ படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான ஷிபு தமீன் தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் மூலம் விக்ரமுடன் முதன் முதலாக ஜோடி சேரவிருக்கும் நித்யா மேனன் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள் நித்யா மேனன் தரப்பினர்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...