பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளிவந்த படம் மாயா. வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து ஓடிய இத்திரைப்படம் டெக்னிக்கலாக பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக இப்படத்தின் பின்னணி இசை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்திற்கு இசையமைத்தவர் ரான் யோஹான். அறிமுக இசையமைப்பாளரான இவரது இசையில் ‘மாயா’ ஆல்பத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இருந்தபோதிலும், ‘மாயா’வின் தேவைக்கேற்ப படத்தில் ஒரேயொரு பாடலை மட்டுமே பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால், படத்தின் பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருந்தார் ரான். குறிப்பாக டால்பி அடமாஸ் சவுன்ட் சிஸ்டம் கொண்ட திரையரங்குகளில் ‘மாயா’வின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
‘மாயா’வில் கிடைத்த வரவேற்பு, தற்போது ரான் யோஹானுக்கு இன்னொரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மதயானைக் கூட்டம், கிருமி ஆகிய படங்களில் நடித்த கதிர் நடிக்கும் ‘சிகை’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் ரான். டிவைன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ஜெகதீசன் சுபு இயக்குகிறார். படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் இப்படத்தில் மொத்தம் 2 பாடல்கள்தானாம். இருந்தாலும் ‘சிகை’யின் பின்னணி இசையில் பெரும் சவால் காத்திருக்கிறதாம் இசையமைப்பாளர் ரானுக்கு.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....