கொண்டாட்டமில்லை – தொண்டாற்றுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

கொண்டாட்டமில்லை – தொண்டாற்றுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

செய்திகள் 12-Dec-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

டிசம்பர் -12 என்றது நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் தான்! ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட விரும்பாவிட்டாலும் அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமான முறையில் அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வார்கள்! ஆனால் இந்த வருடம் தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு, துன்பத்திற்குள்ளாகியிருக்கிற நிலையில், ரஜினி இந்த வருட பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்து, அதற்கு பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலியன்ற உதவிகளை செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இது ஒருபுறம் வருத்தத்தை தரும் விஷயம் என்றாலும், தனது தலைவனின் அன்புக் கட்டளைக்கு இணங்கி மக்களுக்கு சேவை செய்வதையே பெரும் தொண்டாக நினைத்து மகிழ்கிறார்கள்.

கடந்த 40 ஆண்டு காலமாக சினிமாவில் பயணித்து, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது ‘கபாலி’ படத்தின் படபிடிப்புக்காக கோவாவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு, ஷங்கரின் இயக்கத்தில் ‘எந்திரன்-2’வில் நடிக்கவும் ஆயத்தமாகி வரும் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;