தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டாக சினிமா கலைஞர்கள் பலர் ஏற்கெனவே தமிழக அரசிடம் நிறைய நிதியை அளித்துள்ள நிலையில் நேற்று நடிகர் விக்ரமும் 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் மூலமாக இந்த நிதியை விக்ரம் அளித்துள்ளார். அதைப் போல பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், ஏஜிஎஸ் தியேட்டர் குழுமத்தின் தலைவருமான கல்பாத்தி எஸ்.அகோரம் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் இவரது குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ரீச் அவுட்’ என்ற அறக்கட்டளையும் வெள்ளதால பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....
இயக்குனர் அட்லி, நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் ‘பிகில்’. தீபாவளியை முன்னிட்டு...
‘தீபாவளி ரிலீஸ்’ என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்தப்படம் எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற...