சிவகார்த்திகேயனை இயக்குகிறார் ‘தனி ஒருவன்’ இயக்குனர்!

சிவகார்த்திகேயனை இயக்குகிறார் ‘தனி ஒருவன்’ இயக்குனர்!

செய்திகள் 11-Dec-2015 11:59 AM IST Chandru கருத்துக்கள்

ரீமேக் படங்களுக்கு பெயர்போன ஜெயம் ராஜா, சமீபத்தில் வெளிவந்து சூப்பர்டூப்பர் ஹிட்டாகிய ‘தனி ஒருவன்’ படம் மூலம் மோகன் ராஜாவாக உருவெடுத்தார். இப்படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்குப் பிறகு அவரைத்தேடி பல பிரம்மாண்டமான வாய்ப்புகள் வந்தன. ஹிந்தியில் ‘தனி ஒருவன்’ ரீமேக்கில் சல்மான் கானை, மோகன் ராஜா இயக்கவிருக்கிறார் என்றுகூட செய்திகள் வலம் வந்தன. ஆனால், சில நாட்களுக்கு முன்பே நமது இணையதளத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த செய்தி அதிகாரபூர்வமாகியிருக்கிறது.

ஆர்.டி.ராஜாவின் ‘24ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிறுவனத்தின் 2வது தயாரிப்பாக உருவாகவிருக்கும் படத்தைதான் மோகன் ராஜா இயக்கவிருக்கிறார். இப்படம் குறித்த மேலும் பல விவரங்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;