ரஜினி பிறந்தநாளில் ‘எந்திரன் 2’ : அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினி பிறந்தநாளில் ‘எந்திரன் 2’ : அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 11-Dec-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

‘கபாலி’ பற்றிய செய்திகளே ஒவ்வொரு நாளும் சென்சேஷனலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ‘எந்திரன் 2’ படம் பற்றிய செய்திகளும் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் எப்போது துவங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் நாளை (டிசம்பர் 12) சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எந்திரன் 2’ பட பூஜையை நடத்த திட்டமிட்டிருக்கிறதாம் லைக்கா. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

ஷங்கர் இயக்கும் இப்படம் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எமி ஜாக்ஸன் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாளை பூஜையுடன் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் படப்பிடிப்பு என்பது ‘கபாலி’ பட வேலைகள் முடிந்தபிறகே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;