பொங்கலுக்கு வருகிறார் ரஜினி முருகன்!

பொங்கலுக்கு வருகிறார் ரஜினி முருகன்!

செய்திகள் 11-Dec-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ இம்மாதம் 4-ஆம் தேதி ரிலீசாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் 4-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருந்த ‘ரஜினி முருகன்’ பட ரிலீஸை தள்ளிவைப்பதாக சமீபத்தில் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தினர் அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் ‘ரஜினி முருகன்’ படம் இனி ஃபிப்ரவரி மாதம் தான் வெளியாகும் என்றும் ஒரு தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து ‘ரஜினி முருகன் படத்தை பொங்கலையொட்டி ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக இப்போது விளம்பரங்கள் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தள்ளிப் போன ‘ரஜினி முருகன்’ ஜனவரி மாதம் 14-ஆம் தேதியாவது ரிலீசாகும் என்று எதிர்பார்ப்போம். பொங்கலையொட்டி சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அரண்மனை-2’, விஷால், பாண்டிராஜ் கூட்டணியின் ‘கதகளி’, ‘ஜெயம்’ ரவியின் ‘மிருதன்’, பாலாவின் 'தார தப்பட்டை' ஆகிய படங்களும் பொங்கல் களத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;