கமல், ஜீவாவின் வெள்ள நிவாரண நிதி!

கமல், ஜீவாவின் வெள்ள நிவாரண நிதி!

செய்திகள் 11-Dec-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உதவி செய்து வருவதோடு சினிமாவை சேர்ந்த பல கலைஞர்களும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இறங்கி உதவிகளை செய்து வருகிறார்கள். அத்துடன் பல கலைஞர்கள் நடிகர் சங்கம் வாயிலாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கும் பண உதவிகளை செய்து வருகிறார்கள். ஏற்கெனவே பல கலைஞர்கள் லட்சக்கணக்கான பண உதவிகளை செய்துள்ள நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கம் வாயிலாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக ரூபாய் 15 லட்சமும், நடிகர் ஜீவா 10 லட்சமும் வழங்கியுள்ளார்கள். தமிழக மக்களுக்கு எப்போது ஒரு இன்னல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு முன் நின்று உதவுவதில் சினிமா கலைஞர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;