‘அஞ்சல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘அஞ்சல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 10-Dec-2015 5:36 PM IST VRC கருத்துக்கள்

சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள படம் ‘அஞ்சல’. விமல், நந்திதா, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கியுள்ளார். பிரபல மலையாள பட இசை அமைப்பாலர் கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். அரசாங்கம் சாலையை அகலப்படுத்தும் வேலையை செய்யும்போது அதனால் பாதிக்கப்படும் பரம்பரையான ஒரு டீ கடையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து சமீபத்தில் பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ‘அஞ்சல’ படத்தை வருகிற 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்! இதே தினம் தான் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘பசங்க-2’ படமும் ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

7 டீஸர்


;