தனுஷ், த்ரிஷாவின் கொடி!

தனுஷ், த்ரிஷாவின் கொடி!

செய்திகள் 10-Dec-2015 3:03 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ படம் வருகிற 18ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து தனுஷ், துரைசெந்தில் குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷ் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், அண்ணன் கேரக்டருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் நம் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் சம்பந்தமாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இப்படத்திற்கு ‘கொடி என்று டைட்டில் வைத்துள்ளார்களாம்! ஏற்கெனவே தனுஷ் நடித்த 4 படங்களுக்கு ரஜினி நடித்த படங்களின் தலைப்பை சூட்டியுள்ள நிலையில் ரஜினி நடித்த ‘கொடி பறக்குது’ பட டைட்டிலுள்ள ‘கொடியை துனுஷின் புதிய படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள்! இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பும் விரைவில் துவங்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;