சல்மான் கான் விடுதலையானார்!

சல்மான் கான் விடுதலையானார்!

செய்திகள் 10-Dec-2015 3:03 PM IST VRC கருத்துக்கள்

மும்பையில் கடந்த 2002-ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பயணம் செய்த கார் ஒரு விபத்தில் சிக்கியது. சல்மான் கான் மது அருந்திவிட்டு அந்த காரை ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று அவர் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை நீதி மன்றம் சமீபத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது! இதனை தொடர்ந்து அந்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சல்மான் கான் வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கில் இன்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சல்மான் கான் மது அருந்தியிருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதாக மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அந்த வழக்கிலிருந்து இன்று விடுதலையாகியுள்ளார் சல்மான் கான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;