விஜய் படத்திற்கு சூப்பர்ஸ்டாரின் இசையமைப்பாளர்!

விஜய் படத்திற்கு சூப்பர்ஸ்டாரின் இசையமைப்பாளர்!

செய்திகள் 10-Dec-2015 12:04 PM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய். இப்படம் முடிவடைந்ததும் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்யின் 60வது படமாக உருவாகவிருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் கிடைத்த வண்ணமிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும், நடிகர்களின் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கான எடிட்டிங் பணிகளை பிரவீன் கே.எல்லும், ஒளிப்பதிவினை ஆர்.மதியும் கவனிக்கவிருக்கிறார்கள் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜயா புரெடாக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை தற்போது படத்தின் இயக்குனர் பரதன் உறுதி செய்திருக்கிறாராம். தற்போது சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ பட வேலைகளில் பிஸியாகவிருக்கும் சந்தோஷ் நாராயணன், அப்பட வேலைகள் முடிவடைந்ததும் ‘விஜய் 60’ படத்திற்கான இசைப் பணிகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;