‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. பிரபல நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமா உலகத்தில் அடியெடுத்து வைத்திருந்தாலும், தன்னுடைய தனித்திறமையால் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் அதர்வா. குறிப்பாக பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடித்து வெளிவந்த ‘பரதேசி’ திரைப்படம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது. இருந்தபோதும், அவரின் நடிப்பில் இதுவரை வெளிவந்துள்ள 5 படங்களும் வணிகரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்ற குறை இருந்து வருகிறது. நாளை வெளிவரவிருக்கும் ‘ஈட்டி’ திரைப்படம் அந்தக் குறையைப்போக்கும் என பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறார் அதர்வா.
ரவி அரசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால் அந்த ராசி இப்படத்திற்கும் ஒர்க்அவுட்டாகும் என்ற நம்பிக்கையோடிக்கிறது படக்குழு. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பெரிய அளவில் எந்த படமும் ரிலீஸ் செய்யப்படவில்லை. ஏற்கெனவே வெளிவந்த வேதாளம், இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களும் தற்போது ஒருசில திரையரங்குகளில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நாளை வெளியாகவிருக்கும் ‘ஈட்டி’ படத்திற்கு 250க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு இந்த வருடம் தமிழில் நேரடியாக வெளியாகவிருக்கும் 200வது திரைப்படம் என்ற பெருமையும் ‘ஈட்டி’ படத்திற்கு கிடைக்கவிருக்கிறதாம்.
‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...
‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...
அதர்வாவை நடிக்க வைத்து ‘பாணா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்கலை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் அடுத்து...