வெள்ள நிவாரண நிதி : ஷங்கர் தந்த 10 லட்சம்!

வெள்ள நிவாரண நிதி : ஷங்கர் தந்த 10 லட்சம்!

செய்திகள் 10-Dec-2015 11:28 AM IST Chandru கருத்துக்கள்

தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க அரசுத்துறை நிர்வாகங்கள் ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்க, தங்கள் பங்குக்கு திரைத்துறையும் பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகிறது. அதோடு தமிழக முதலமைச்சர் திரட்டி வரும் வெள்ள நிவாரண நிதிக்காக பல்வேறு நடிக, நடிகையர்கள் தங்களால் முயன்ற தொகையினை கொடுத்து வருகிறார்கள். இதில் லேட்டஸ்ட்டாக நடிகை ஸ்ரீதிவ்யா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியளித்த வண்ணம் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;