ஒரே நேரத்தில் ஆந்திரா, தமிழகத்தை குறிவைக்கும் தனுஷ்!

ஒரே நேரத்தில் ஆந்திரா, தமிழகத்தை குறிவைக்கும் தனுஷ்!

செய்திகள் 9-Dec-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ பட வெற்றியை தொடர்ந்து அதே டீம் இணைந்து உருவாக்கியிருக்கும் தனுஷின் ‘தங்கமகன்’ வருகிற 18-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியியாகவிருக்கிறது. தெலுங்கு மொழியிலும் அதே தினம் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ‘நவ மன்மதுடு’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள்! ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் பணிபுரிந்த பலரும் இப்படத்திலும் இணைந்திருப்பதால் ‘தங்கமகன்’ மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களும் தமிழில் வெளியாகி ஒரு சில வாரங்கள் கழித்து தான் தெலுங்கில் வெளியாகும். ஆனால் தங்க மகனை பொறுத்த வரையில் தமிழில் வெளியாகும் அதே தினம் தெலுங்கிலும் வெளியாகவிருப்பதால் தனுஷின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;