ரிலீஸ் தள்ளுகிறதா கெத்து?

ரிலீஸ் தள்ளுகிறதா கெத்து?

செய்திகள் 9-Dec-2015 12:22 PM IST VRC கருத்துக்கள்

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘கெத்து. உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தயாரிக்கும் இப்படத்தை இம்மாதம் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு பட வேலைகளை விறுவிறுப்பாக செய்து வந்தனர். ஆனால் எதிர்பாராமல் தமிழகத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் திட்டமிட்டபடி ‘கெத்து’ பட வேலைகளை முடிக்க முடியவில்லை என்றும் இன்னும் 10 சதவிகித வேலைகள் மிச்சமிருப்பதால் கெத்து படத்தின் ரிலீஸை ஃபிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல், ‘நண்பேன்டா’ படங்களின் மூலம் வரிசையாக உதயநிதிக்கு மூன்று ஹிட் ஆல்பங்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரே தான் ‘கெத்து’ படத்திற்கும் இசையமைப்பாளர். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருபவர் எமி ஜாக்சன் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;