பிப்ரவரி ரிலீஸ் ப்ளானில் ரஜினி முருகன்?

பிப்ரவரி ரிலீஸ் ப்ளானில் ரஜினி முருகன்?

செய்திகள் 8-Dec-2015 12:39 PM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ இம்மாதம் 4-ஆம் தேதி ரிலீசாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள். ஆனால் எதிர்பாராமல் தமிழகத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் 4-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருந்த ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ஈட்டி ஆகிய படங்களின் ரிலீஸை தள்ளி வைத்தார்கள். கடந்த 4-ஆம் தேதி ரிலீசான ஒரே ஒரு படம் ‘உறுமீன்’ மட்டும்தான்! ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட படங்களில் அதர்வா நடித்துள்ள ‘ஈட்டி’ வருகிற 11-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஆனால் ‘ரஜினி முருகன்’ பட ரிலீஸ் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் படி ‘ரஜினி முருகன்’ படத்தை வருகிற ஃபிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;