‘மாயா’ பாணியில் நயன்தாரா மீண்டும் நடிக்கும் படம்!

‘மாயா’ பாணியில் நயன்தாரா மீண்டும் நடிக்கும் படம்!

செய்திகள் 7-Dec-2015 3:59 PM IST VRC கருத்துக்கள்

‘மஞ்சப்பை’ படத்தை தயாரித்த இயக்குனர் சற்குணம் அடுத்து தனது ‘A Sarkunam Cinemaz’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் நயன்தார நடிப்பில் வெளிவந்து 50 நாட்களை கடந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘மாயா’. இப்படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டதோடு, படமும் வெற்றி பெற்றதால் அதே பாணியில் மீண்டும் நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சற்குணத்திடம் ‘களவாணி’ படம் முதல் ‘சண்டி வீரன்’ படம் வரை உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;