வெள்ள நிவாரணப் பணிகளில் அகரம்... நீங்களும் கரம் கோர்க்கலாம்!

வெள்ள நிவாரணப் பணிகளில் அகரம்... நீங்களும் கரம் கோர்க்கலாம்!

செய்திகள் 7-Dec-2015 3:46 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் வகையில் பலதரப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக மக்களுக்கு செய்து வருகின்றன. அதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் நடத்தி வரும் அகரம் ஃபவுண்டேஷனும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தற்போது இந்த தொண்டு நிறுவனம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக முகாம் ஒன்றை அமைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இந்த முகாமைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் கொடுக்க விரும்பும் நிவாரணப் பொருட்களை வழங்கினால், அவர்கள் அதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இது குறித்து மேலும் அதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்...

அலைபேசி எண் : 96598 56522

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;