சென்னை வெள்ளம் – எளிமையாக திருமணம் செய்துகொண்ட சந்தியா!

சென்னை வெள்ளம் – எளிமையாக  திருமணம் செய்துகொண்ட சந்தியா!

செய்திகள் 7-Dec-2015 12:32 PM IST VRC கருத்துக்கள்

‘காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சந்தியா. ‘காதல்’ படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்துள்ள சந்தியா, நேற்று (6-12-15) கேரளாவிலுள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். சந்தியா திருமணம் செய்துகொண்டவரின் பெயர் வெங்கட் சந்திரசேகரன். சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கட் சந்திரசேகரன் சென்னையில் சொந்தமாக ஐ.டி.நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை வடபழனியில் வசித்து வரும் சந்தியாவின் குடும்பத்தினர் இத்திருமணத்தை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் சென்னையில் எதிர்பாராமல் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் திருமணத்தை எளிமையாக நடத்துவது என்று முடிவு செய்து அதன்படி திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;