ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை விருந்து!

ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை விருந்து!

செய்திகள் 30-Nov-2015 2:51 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.ரஹ்மான இசையில் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹிந்தி படம் ‘தமாஷா’. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘24’ கௌதம் மேனனின் ‘அச்சம என்பது மடமையடா’ ஆகிய படஙக்ளுக்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சென்னை மற்றும் கோவையில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில். "நாட்கள் நகர்ந்தது, நேரம் வந்துவிட்டது! பொங்கல் பண்டிகை நாளை அடுத்து சென்னை, கோவையில் ஒரு தமிழ் இசைத் திருவிழா" என்று குறிப்பிட்டுள்ளார்! ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே சென்னையில் ஒரு சில இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;