3 மாதம் 3 படம் – பாண்டிராஜின் ரிலீஸ் லிஸ்ட்!

3 மாதம் 3 படம் – பாண்டிராஜின் ரிலீஸ் லிஸ்ட்!

செய்திகள் 30-Nov-2015 11:38 AM IST VRC கருத்துக்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு இயக்குனருக்கு வருடத்துக்கு ஒரு படம் ரிலீசானாலே அது பெரிய விஷயம்! நிலைமை இப்படியிருக்க, ஒரு இயக்குனர் இயக்கிய 3 படங்கள் 3 வார இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிறது. இந்த பெருமைக்குரிய இயக்குனர் யார் என்றால், அவர் பண்டிராஜ் தான்! இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பசங்க-2’ டிசம்பர் 24-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து விஷால் நடிப்பில் பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் ‘கதகளி’யை பொங்கலையொட்டி ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். ‘பசங்க-2’ படம் துவங்குவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட படம் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’. சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு ஃபிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்! இந்த மூன்று படங்களின் வெளியீட்டு தேதிகளையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதால் பாண்டிராஜின் 3 படங்கள் 3 மாதத்தில் அடுத்தடுத்து ரிலீசாகிறது. இதனால் பாண்டிராஜ் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;