விஜய்யின் ‘தெறி’யில் டாம் க்ரூஸ் பட ஸ்டன்ட் கலைஞர்!

விஜய்யின் ‘தெறி’யில் டாம் க்ரூஸ் பட ஸ்டன்ட் கலைஞர்!

செய்திகள் 30-Nov-2015 11:19 AM IST Chandru கருத்துக்கள்

சமூகவலைதளமெங்கும் தற்போது ‘விஜய் 59’ பட ஃபர்ஸ்ட் லுக்தான் ‘தெறி’த்துக் கொண்டிருக்கிறது. அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வித்தியாசமான மூன்று பரிணாமங்களில் தோன்றவிருக்கும் விஜய், சீரியஸ் போலீஸாக நடிக்கிறாராம். சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் ‘தெறி’ விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி.

கோவாவைத் தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்களாம். திலீப் சுப்பாராயன் மாஸ்டரின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர் ஒருவரையும் பயன்படுத்தியிருக்கிறார்களாம். டாம் க்ரூஸ் நாயகனாக நடிப்பில் வெளிவந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் 5ஆம் பாகத்தில் ஸ்டன்ட் டிரைவராகப் பணியாற்றிய Mauro Calo என்பவர் ‘தெறி’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதில் பங்கு வகித்திருக்கிறாராம். இந்த தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், இயக்குனர் அட்லி, மாஸ்டர் திலீப் சுப்பாராயன் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;