மீண்டும் ‘வீரா’ – விஷ்ணு, கருணாகரன் கூட்டணி!

மீண்டும் ‘வீரா’ – விஷ்ணு, கருணாகரன் கூட்டணி!

செய்திகள் 30-Nov-2015 10:51 AM IST VRC கருத்துக்கள்

‘யாமிருக்க பயமேன்’, ‘யான்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமார் அடுத்து விஷ்ணு, கருணாகரன் நடிப்பில் ‘வீரா என்ற படத்தை தயாரிக்கிறார். ரஜினி நடித்த படங்களின் டைட்டிலை மீண்டும் வைத்துக் கொண்டு இப்போது பல படங்கள் உருவாகி வருகிற நிலையில், தற்போது விஷ்ணு, கருணாகரன் நடிக்கும் படத்திற்கும் ரஜினி பட டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள். தற்போது சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் முதலானோர் நடிப்பில் ‘கோ-2’ என்ற படத்தை தயாரித்து வருகிறது எல்ரெட் குமாரின் ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம்! இந்நிறுவன தயாரிப்பான ‘வீரா’வை இயக்குவது யார்? மற்ற நடிகர் நடிகைகள் யார் போன்ற விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;