சிம்பு - நயன்தாராவின் காதலர் தின ஸ்பெஷல்!

சிம்பு - நயன்தாராவின் காதலர் தின ஸ்பெஷல்!

செய்திகள் 30-Nov-2015 10:29 AM IST Chandru கருத்துக்கள்

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் சிம்பு & நயன்தாராவின் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் சிற்சில காட்சிகளும், ஒரு பாடலும் இன்னும் படமாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் பாடல்கள் ஏற்கெனவே ரெடியாக இருக்கின்றன. விரைவில் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல் வெளிவரலாம்.

இந்நிலையில், இப்படம் 2016ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், லேட்டஸ்ட் தகவலின்படி ‘இது நம்ம ஆளு’ படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட சிம்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. சிம்பு படத்தின் டீஸர்களிலேயே முதல்முறையாக இப்படத்தின் டீஸருக்குதான் யு டியூப்பில் 50 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். ‘யூத்’களின் பல்ஸை கச்சிதமாக கைப்பற்றியிருக்கும் இப்படம், ‘காதலர் தின’த்தன்று வெளியானால் தமிழக திரையரங்குகளில் காதலர்களின் கூட்டம் அலைமோதும் என்பது மட்டும் நிச்சயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;