ஜீவாவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்

ஜீவாவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

செய்திகள் 30-Nov-2015 10:20 AM IST VRC கருத்துக்கள்

அஜித்துடன் ‘வேதாளம்’ படத்தில் நடித்த லட்சுமி மேனன் அடுத்து ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது ‘திருநாள்’, ‘போக்கிரி ராஜா ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா அடுத்து ‘ஜெமினி கணேசன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் முத்துக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து லட்சுமி மேனன் நடித்து வரும் படம் ‘மிருதன்’. ‘ஜெயம்’ ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;