‘என்னை அறிந்தால்’ சத்யதேவ் பாணியில் ‘தெறி’ விஜய்!

‘என்னை அறிந்தால்’ சத்யதேவ் பாணியில் ‘தெறி’ விஜய்!

செய்திகள் 28-Nov-2015 1:37 PM IST Chandru கருத்துக்கள்

விஜய்க்கு போலீஸ் வேடமொன்றும் புதிதல்ல. ஏற்கெனவே போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களில் போலீஸ் யூனிஃபார்மில் வலம் வந்திருக்கிறார். ஆனால், இந்த இரண்டு படங்களிலுமே முதலில் ரௌடியாக அறிமுகமாகி, பின்னர் போலீஸாக உருவெடுப்பதுபோல் அவரின் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும். அதிலும் அந்த போலீஸ் கதாபாத்திரங்கள் கொஞ்சம் விளையாட்டுத்தனத்துடன் இருப்பது போலயே காட்சிகளை வைத்திருந்தார்கள்.

ஆனால் ‘தெறி’ படத்தைப் பொறுத்தவரை விஜய்யின் போலீஸ் கேரக்டர் சீரியஸ் ரகமாம். படத்தின் ஆரம்பத்திலேயே போலீஸாகத்தான் விஜய் அறிமுகமாவாராம். சொல்லப்போனால், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்து ஹிட்டான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் நடித்த சத்யதேவ் போலீஸ் போன்று ‘எமோஷனல்’ ‘காப்’பாக இருப்பாராம் ‘தெறி’ விஜய். இதனால் ‘இளையதளபதி’ ரசிகர்களுக்கு விஜய்யின் இந்த போலீஸ் கேரக்டர் புதிய விருந்து படைக்கும் என்கிறார் இயக்குனர் அட்லி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;