மழை நிவாரண நிதியாக 25 லட்சம் கொடுத்த சிவகுமார் குடும்பம்!

மழை நிவாரண நிதியாக 25 லட்சம் கொடுத்த சிவகுமார் குடும்பம்!

செய்திகள் 28-Nov-2015 1:30 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக தமிழகத்தை புரட்டிப்போட்ட மழையால் மாநிலத்தின் பல பகுதிகள் பெரிய சேதமடைந்திருக்கின்றன. இந்த பெருத்த சேதத்திலிருந்து மீண்டு வருவதற்காக மத்திய, மாநில அரசுகள் சில நூறு கோடிகளை நிவாரண நிதியாக அறிவித்திருக்கின்றன. இன்னொருபுறம் சமுதாயத்தின் பல மட்டங்களிலிருந்தும் உதவிக்கரங்களும் நீண்டு கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தமிழக மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சிலரும் நிவாரணத்தொகைகளை அறிவித்திருக்கிறார்கள். கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களான நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்கம் மூலமாக முதல்வரின் மழை நிவாரண நிதிக்காக வழங்கியிருக்கிறார்கள். அதேபோல் நடிகரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷாலும் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;