உப்புகருவாடு – விமர்சனம்

சுவையானது!

விமர்சனம் 28-Nov-2015 11:50 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Radha Mohan
Production : First Copy Pictures, Night Show Cinema
Starring : Nandita, Karunakaran
Music : Steeve Vatz
Cinematography : Mahesh Muthuswami
Editing : T. S. Jay

‘மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற அருமையான படங்களை தந்த ராதாமோகன் இயக்கியுள்ள இந்த ‘உப்புகருவாடு’ சுவையானதாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

சினிமா இயக்குனரான கருணாகரனின் முதலாவது படம் தோல்வி. இரண்டாவது படம் பாதியிலேயே நின்று போனது. தனது மேனேஜர் மயில்சாமி, இணை இயக்குனர் சாம்ஸ், உதவி இயக்குனர் நாராயணன் ஆகியோருடன் மூன்றாவது படம் இயக்க வாய்ப்பு தேடுகிறார்கள். அப்போது மீனவ குப்பத்தைச் சேர்ந்த ரௌடி எம்.எஸ்.பாஸ்கர் படம் தயாரிக்க முன் வருகிறார். ஆனால் அவர் ஒரு கண்டிஷன் போடுகிறார், தனது மகள் நந்திதாவை கதாநாயகியாக்க வேண்டும் என்று! பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் கருணாகரன் அரை மனதுடன் படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார். ஹீரோயின் புதுமுகம் என்பதால அவருக்கு ரிகர்சல் அளிக்கிறார்கள். சின்ன குழந்தையை போன்ற மனநிலையுடன் இருக்கும் நந்திதாவுக்கு ரிகர்சல் அளிக்க துவங்கிய நாளிலிருந்து நடக்கும் கூத்து, கும்மாளம், சென்டிமென்டான விஷய்ங்கள், படத்திற்கு வரும் சிக்கல்கள்... இப்படி செல்லும் திரைக்கதையில் படம் எடுக்கப்பட்ட்தா? நந்திதா ஹீரோயின் ஆனாரா? இல்லையா? என்பதை வித்தியாசமான கிளைமேக்ஸுடன் சொல்லியிருக்கும் படமே ‘உப்புகருவாடு’

படம் பற்றிய அலசல்

நிஜத்தில் சினிமாவுக்குள் நடக்கும் சமவங்களை ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராதா மோகன். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை என்றாலும் இடை வேளக்குப் பிறகு படம் கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருகிறது. இருந்தாலும் ஒரு ஆக்‌ஷன் படத்திற்குரிய பல ட்விஸ்டகளை வைத்து வித்தியாசமான ஒரு கிளைமேக்ஸுடன் படத்தை முடித்திருக்கிற ராதா மோகனுக்கு ஒரு ஸ்பெஷ்ல் பொக்கே அளிக்கலாம்! படத்தின் திரைக்கதைக்கு பெரிய பலமாக அமைந்திருப்பது பொன் பார்த்திபனின் யதார்த்தமான வசனங்கள் தான். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் அமைதுள்ள பாடல்கள் சுமார் ரகம் தான்! பின்னணி இசையிலும் அவருக்கு அதிக வேலை கொடுக்கவில்லை. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு கச்சிதம்.

கலைஞர்களின் பங்களிப்பு

இதுவரை காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த கருணாகரன் இப்படத்தில் சீரியஸான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். பட வாயுப்பு தேடி அலையும் ஒரு இயக்குனரின் வலிகளை வேதனைகளை அழகாக வெளிப்ப்டுத்தியுள்ளார். நடிக்க தெரியாத நடிகையாக வரும் நந்திதா, ரசிக்க வைக்கிறார். அவருக்கு தப்பு தப்பாக வசனம் சொல்லி கொடுக்கும் உதவி இயக்குனராக வரும் ‘டவுட்’ செந்தில், குறுக்கிட்டு பேசிக் கொண்டே இருக்கும் சாம்ஸ், எதற்கு எடுத்தாலும் சென்டிமென்ட் வசனம் பேசும் மயில் சாமி, ரௌடியாக வரும் எம்.எஸ். பாஸ்கர், அவரது உதவியாளராக வரும் குமரவேல், சாமியாராக வரும் ‘டாடி’ சரவணன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் மனதில் நிற்கும் படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

திரைக்கதை, இயக்கம்
எல்லா நடிகர்களுக்கும் சம பங்களித்திருப்பது
வசனங்கள்

பலவீனம்

இடைவேளைக்கு பிறகு கதை கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பது போன்ற உணர்வை தருவது!
இசை

மொத்தத்தில்

ராதாமோகனின் ‘மொழி’, ‘அபியும் நானும்’ படங்களை போன்று இப்படமும் குடும்பத்தினருடன் சென்று பார்க்க கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது. ‘உப்புகருவாடு’ அனைவரையும் ர(ரு)சிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : சுவையானது!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி டீஸர்


;