ஒரு மேடையில் 2 பட ஆடியோ வெளியீட்டு விழா!

ஒரு மேடையில் 2 பட ஆடியோ வெளியீட்டு விழா!

செய்திகள் 27-Nov-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

‘மாருதி ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் என்.முத்துக்குமார் தயாரிப்பில் 'தென்னிந்தியன்', 'சூரத்தேங்காய்' ஆகிய இரண்டு படங்களின் ஆடியோ வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. நேரடி தமிழ் படமாக எடுக்கப்பட்டுள்ள ‘சூரத்தேங்காய்’ படத்தில் ‘மதுரை டு தேனிவழி ஆண்டிப்பட்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்த குரு அரவிந்த் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக புதுமுகம் சமந்தி நடித்துள்ளார். சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இப்படம் நில அபகரிப்பு, கீழ்மட்ட அரசியல் வாதிகளின் அட்டூழியம், மதுவுக்கு அடிமையான மகனை மீட்டெடுக்க போராடும் ஒரு தாயின் பாசம் ஆகியவற்றை வலிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் சக்தி இசை அமைத்துள்ளார்.

மலையாளத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள ‘தென்னிந்தியன்’ படத்தில் சரத்குமார், ‘நேரம்’ பட புகழ் நிவின் பாலி, பாவனா முதலானோர் நடித்துள்ளனர் இப்படத்தை பிபின் பிரபாகர் இயக்கியுள்ளார். ஷான் குமார் இசை அமைத்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மலையாளத்தை தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த இரண்டு படங்களின் பாடல்களை வெளியிட்டு ‘கில்டு’ அமைப்பின் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, ‘‘இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன். 'கோலிசோடா' சின்ன படம்தான். அது 40 கோடி லாபம் சம்பாதித்தது. சிறு படங்கள் நிறைய வரவேண்டும், அவை வெற்றியும் பெறவேண்டும்! ஏற்கெனவே ஒரு சில படங்களில் நடித்துள்ள 'சூரத்தேங்காய்' நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார். அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இது தான் நம் நாட்டு நிலைமை, இந்த நிலைமை மாறவேண்டும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்


;