‘பசங்க-2’ ரிலீஸ் தேதி மாற்றம்!

‘பசங்க-2’ ரிலீஸ் தேதி மாற்றம்!

செய்திகள் 27-Nov-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை டிசம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருந்தார்கள். ஆனால் இப்போது திடீரென்று ‘பசங்க-2’வின் ரிலீஸை டிசம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா ஆகியோருடன் சூர்யா, அமலா பால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிந்து மாதவி, கார்த்திக் குமாரும் நடித்துள்ள இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து வெளியாகும் படம், குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் ‘பசங்க-2’ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;