இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘காஞ்சிவரம்’ படத்தை இயக்கிய பிரியதர்சன் தற்போது இயக்கியுள்ள படம் ‘சில சமயங்களில்’. ‘காஞ்சிவரம்’ படத்தில் பட்டு நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொன்ன பிரியதர்சன் ‘சில சமயங்களில்’ படத்தில் ‘எய்ட்ஸ்’ என்னும் கொடிய நோயை கதைக் கருவாக்கியிருக்கிறார். ‘காஞ்சிவரம்’ படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இப்படத்திலும் நடித்திருக்க இவர்களுடன் ஒரு முக்கிய கேரக்டரில் அஷோக் செல்வனும் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் குறித்து இயக்குனர் பிரியதர்சன் பேசும்போது,
‘‘ஒரே ஒரு நாளில், எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்துகொண்டு அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் 8 பேரின் பதற்றம், சிரிப்பு, அழுகை கலந்த கதை தான் ‘சில சமயங்களில்’ என்று கூறியிருப்பதோடு, தான் இதுவரை இயக்கிய 90 படங்களில் ஒரு படைப்பாளியாக தனக்கு பெரும் மனநிறைவை தந்த இரண்டு படங்கள் ‘காஞ்சிவரம்’ மற்றும் ‘சில சமயங்களில்’ ஆகியவை தான்’’ என்றும் கூறியிருக்கிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய், அமலா பால் தம்பதியர் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் உருவான படம் ‘சில சம்யங்களில்’....
ப்ரியதரசன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர்...
ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர்...