‘தாரைதப்பட்டை’க்காக இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா!

‘தாரைதப்பட்டை’க்காக இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா!

செய்திகள் 26-Nov-2015 10:38 AM IST VRC கருத்துக்கள்

பாலாவின் ‘தாரைதப்பட்டை’ பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கிற நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை சத்யம் சினிமாஸும், மதுரை ஏரியா விநியோக உரிமையை அன்புச் செழியனின் ‘கோபுரம் ஃபிலிம்ஸும்’ கைபற்றியுள்ளது. அதே நேரத்தில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டி.வி.யும் பெரிய ஒரு தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாவின் ‘பாலா ஸ்டுடியோஸு’ம் சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்க, இளையராஜா இசை அமைக்கிறார். இது இளையராஜா இசை அமைக்கும் 1000-வது படம் என்பதால் அவருக்கு பிரம்மாண்டமான முறையில் விழா எடுக்கவும், அந்த விழாவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகனுமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;