விஜய் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 25-Nov-2015 4:18 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 59-வது படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள்? தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கும் என்ற ஆவலில் இருந்தார்கள் விஜய் ரசிகர்கள்! ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இப்போது மகிழ்ச்சி தரும் விதமாக படத்திற்கு ‘தெறி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ‘விஜய்-59’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே இப்படத்திற்கான தலைப்பு பற்றி பல தகவல்கள் வெளியாகியிருந்தது. ‘மூன்று முகம்’, ‘காக்கி’, ‘தாறுமாறு’ இப்படி பல தலைப்புகள் பேசப்பட்டு வந்த நிலையில் இப்போது ‘தெறி’ என்று அதிரடியாக ஒரு டைட்டிலை சூட்டியிருக்கிறார்கள்.

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வந்த படத்திற்கு ‘வேதாளம்’ என்று டைட்டில் வைத்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தில் விஜய் வேதாளமாக நடித்திருந்தர். ‘வேதாளம்’ படத்தில் அஜித் ‘தெறிக்க விடலாமா…’ என்று வசனம் பேசி நடித்திருப்பார். இப்போது அந்த வசனத்திலிருந்து ‘தெறி’யை மட்டும் எடுத்து விஜய் படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;