‘தர்மதுரை’யில் யுவன் சங்கர் ராஜா!

‘தர்மதுரை’யில் யுவன் சங்கர் ராஜா!

செய்திகள் 25-Nov-2015 2:31 PM IST VRC கருத்துக்கள்

‘தென்மேற்கு பருவகாற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி என்றும், இப்படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘தர்மதுரை’ என்று பெயர் வைத்துள்ளார்கள் என்றும் சமீபத்தில் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தை ‘ஸ்டுடியோ 9 மீடியா’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷும், கார்த்திக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள். சீனுராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணையவிருக்கிறது. அதாவது சீனுராமசாமி, விஜய்சேதுபதி, கவிஞர் வைரமுத்து, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். ‘இடம் பொருள் ஏவல்’ படம் இன்னும் ரிலீசாகவில்லை. இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;