மணிரத்னத்தின் வெள்ளைப் பூக்கள்!

மணிரத்னத்தின் வெள்ளைப் பூக்கள்!

செய்திகள் 25-Nov-2015 1:11 PM IST VRC கருத்துக்கள்

‘ஓகே கண்மணி’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி, நானி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் இப்படத்திற்கு ‘வெள்ளைப் பூக்கள்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. முதலில் இப்படத்தில் ‘ஓகே கண்மணி’ படத்தில் நடித்த துல்கர் சல்மான் ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு பதிலாக நானி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஓகே கண்மணி’யை போல யூத்ஸை மனதில் வைத்து தான் இப்படத்தின் கதையையும் எழுதியிருக்கிறாராம் மணிரதனம். இப்படத்தில் கார்த்தி, நானிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது என்றும் இப்படத்திற்கும் மணிரத்னத்தின் ஆஸ்தான் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், ரவி.கே.சந்திரன் முதலானோருடன் தனது படைப்புகளை படம் பிடித்த மணிரத்னம் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ரவி வர்மனிடம் வழங்கியுள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நடிகையர் திலகம் டீஸர்


;