நம்பர் தலைப்பை கைபற்றிய எஸ்.ஜே.சூர்யா!

நம்பர் தலைப்பை கைபற்றிய எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 25-Nov-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ படத்தில் நடித்து முடித்த கையோடு புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்திற்கு ‘174’ என்று பெயர் வைத்துள்ளனர். செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சட்டப்பிரிவில் உள்ள ‘174’ என்பதை தலைப்பாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் காமெடிக்கும் அதிக முக்கியத்துவம் இருக்குமாம்! இரண்டு, 3, 555, 6, மற்றும் விரைவில் ரிலீசாகவிருக்கிற 144, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்கள் வரிசையில் ‘174’ என்ற பெயரில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவகத்தில் துவங்கவிருக்கிறது. இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்குரி ட்ரைலர்


;