கமலின் ‘அப்பா அம்மா விளையாட்டு’

கமலின் ‘அப்பா அம்மா விளையாட்டு’

செய்திகள் 25-Nov-2015 10:59 AM IST VRC கருத்துக்கள்

‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன், மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். முதலில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது மலையாளத்தை தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்! சமீபத்தில் ‘தூங்காவனம்’ தெலுங்கு பதிப்பின் புரொமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்த கமல்ஹாசன் இப்படம் குறித்த தவல்களை தனக்கு நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்! அப்போது 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு தமிழில் ‘அப்பா அம்மா விளையாட்டு’ என்றும் தெலுங்கில் ‘அம்மா நானா ஆட்டா’ என்றும் டைட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். ஹிந்தி பதிப்பிற்கான பெயர் இன்னும் முடிவாகவில்லை போலும்!
25 வருடங்களுக்கு முன் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் ‘சாணக்கியன்’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன்! இப்படம் மிமிக்ரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்தது. பெரிய வெற்றியை பெற்றது இப்படம். அந்த படத்தை தொடர்ந்து 25 வருடங்களுகு பிறகு மீண்டும் கமல்ஹாசனும், டி.கே.ராஜீவ்குமாரும் இணையும் இப்படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கிறதாம். கமல்ஹாசனுடன் ‘சத்யா’ படத்தில் நடித்த அமலா அக்கினேனி, பாலிவுட் நடிகை செரீனா வாஹப் முதலானோர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்! இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்விருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;