‘பசங்க-2’, ‘ஈட்டி’ ஒரே சென்சார் சர்டிஃபிக்கெட்!

‘பசங்க-2’, ‘ஈட்டி’ ஒரே சென்சார் சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 24-Nov-2015 4:01 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா ஆகியோருடன் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி, கார்த்திக் குமார் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனையொட்டி சென்சாருக்கு சென்ற இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எந்த கட்டும் கொடுக்கவில்லையாம். அத்துடன் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறீர்கள் என்று படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருப்பதுடன் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற ‘யு’ சான்றிதழும் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘பசங்க-2’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்!

‘பசங்க-2’ ரிலீசாகிற அதே தினம் வெளியாகவிருக்கும் இன்னொரு படம் ‘ஈட்டி’. அதர்வா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படமும் சென்சார் ஆனது. ஸ்போட்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கும் சென்சாரில் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;